ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, பாஜக மற்றும் அதற்கு துணைபோகும் அதிமுக அரசியலை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் புதுக்கோட்டை பஜாரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி. ஆகியோரின் ஆணைப்படியும், தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் மீன்வளம், மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆலோசனைப் படியும், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா வழிகாட்டுதலின்படியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் கே.கே.ஆர். ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், மாநில உரிமைகள் மீறப்பட்டதாகவும் வலியுறுத்தப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், மாநில வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.