தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் வெங்கடேஸ்வரா டீ ஸ்டால் எதிரே அமைந்துள்ள ஹவுசிங் போர்டு ஐஎன்டியுசி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் சரஸ்வதி பூஜை விழா மிகுந்த ஆனந்தத்துடன் மற்றும் உற்சாகத்துடன் நடைபெற்றது.

விழாவில் சங்கத்தின் தலைவர் பரமசிவன், செயலாளர் முருகராஜ், பொருளாளர் ஈஸ்வர மூர்த்தி, துணைத் தலைவர் முத்துராஜ், துணை செயலாளர் பால கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அத்துடன் உறுப்பினர்கள் முருகன், கணேசன், சரவணன், முருகேசன், ஈஸ்வர மூர்த்தி, விஸ்வநாதன், சிவசங்கர், இசக்கி பாண்டி, பொன் சிவசங்கர், சம்சுதீன், வெங்கடேஷ், விஜயகுமார், தங்கம், ஐயப்பன், எம்.பி. கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் பி. ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலர் ரெங்கசாமி, சங்கத்தின் சட்ட ஆலோசகர்கள் விஜய சுந்தர், பால் ஜோசப் (நோட்ரி பப்ளிக் – மத்திய அரசு), சதீஸ் குமார் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டு, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டன.