தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தூத்துக்குடி மாவட்டமும், புத்தக வாசிப்பு நற்பணி மன்றமும் இணைந்து தூத்துக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மாடியில் சனிக்கிழமை (21.02.2026) சர்வதேச தாய்மொழி நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு “வெல்லும் பொதுவுடமை” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. தோழர் கரிசல் அன்பழகன் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். தமிழாசிரியர் அ. வள்ளிநாயகி தாய்மொழி நாளின் முக்கியத்துவத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்.


“வெல்லும் பொதுவுடமை” என்ற தலைப்பில் நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ், எழுத்தாளர் லோகு உலகம்மாள், கவிஞர் தூ.ரா. துளசிதாசன், ஆசிரியர் பிரபாவதி ஆகியோர் கவிதைகள் வாசித்து பார்வையாளர்களை ஈர்த்தனர்.


வழக்கறிஞர் ஐ.பெ. பாலசேகர், ஆசிரியர் சேவியர், பெருமன்றத்தின் தருவைக்குளம் செயலாளர் தோழர் லாரன்ஸ், இலக்கிய ஆர்வலர் பத்மநாதன் ஆகியோர் தாய்மொழி மற்றும் பொதுவுடமை குறித்துச் சிற்றுரையாற்றினர்.


தாளமுத்துநகர் கிளை செயலாளர் தோழர் அ.ரவி மற்றும் சமூக ஆர்வலர் செல்வின் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். மாவட்ட செயலாளர் தோழர் ஆ.மாரிமுத்து நோக்கவுரை, தொகுப்புரை மற்றும் நன்றியுரையாற்றினார். இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.