Holy Cross Home Science Collegeயில் பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மாணவிகளின் கல்வி சாதனைகளை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் 250 மாணவிகள் தங்கள் பட்டங்களை பெற்றனர்.


விழாவில் S. Kalidasan Subramanian, Manonmaniam Sundaranar University நிர்வாக உறுப்பினர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடத்திட்டங்களின் தனிச்சிறப்புகளை விளக்கி மாணவிகளின் முயற்சி, கட்டுப்பாடு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டி சிறப்புரையாற்றினார்.


கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ரூபா வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து கல்லூரி செயலாளர் அருட்சகோதரி ரோசாகுட்டி ஜோசப் பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்து, ஒவ்வொரு துறையைச் சேர்ந்த மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினார்.


மாணவிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் முக்கிய நிகழ்வாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழா, கல்வியின் உயர்வை மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்புணர்வையும் வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்தது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தினர்.