இளம் தொழில் முனைவோர் பள்ளி எஸ் (YES) என்பது தொழில் முனைவோர் தங்கள் வணிகங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் ஓர் அமைப்பாகும்.

எஸ் (YES) தூத்துக்குடி அத்தியாயம் அதன் 3 வது அத்தியாய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தனியார் ஹோட்டல் கான்ஃபரன்ஸ் காலில் வைத்து கொண்டாடியது.

இந்த நிகழ்விற்கு எஸ் (YES) தூத்துக்குடி அத்தியாய  தலைவர் தினகரன், துணை தலைவர் கௌதமன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடியை சேர்ந்த வணிக அதிபர்கள் பியர்ல் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் எட்வின் சாமுவேல், மற்றும் எஸ்.டி.ஆர். குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பொன்சீலன், ஆகியோர் தொழில் முனைவோரின் கூட்டத்தில் கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கான ஊக்குவிக்கும், மற்றும் ஊக்கமளிக்கும் உரைகளை நிகழ்த்தினர்.

விழாவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட்டு விருந்தினர் பேச்சாளர்களிடமிருந்து மதிப்புமிக்க நுண்ணறிவு களை பெற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை எஸ்  (YES) தூத்துக்குடி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.