பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிமுக  முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன்  தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.


முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-


நாளை (28.03.2025) பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்று வரலாறு படைக்கப் போகும் மாணவ செல்வங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் தாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மனஉறுதியுடனும், மிகுந்த கவனத்துடனும் தேர்வு எழுதி வெற்றி பெற்று மாபெரும் சாதனை புரிய வேண்டுமென அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.