தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைகால சிறப்பு தொகுப்பு தொகையாக ரூ.5,000 வழங்கப்பட்டதை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த 3 மாத மகளிர் உரிமைத் தொகையும், கோடைகால சிறப்பு தொகுப்பும் இணைந்து ரூ.5,000 தொகை ஒரு கோடி 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே கொண்டாட்டம் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையேற்றார். கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்தனர்.


நிகழ்வில் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் மாவட்ட, மாநகர மற்றும் பகுதி நிர்வாகிகள், பெண்கள் அணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து உற்சாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.