தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 77-வது குடியரசுத் தின விழா எழுச்சியுடன் நடைபெற்றது. விழாவில் மேற்கு மண்டல தலைவி அன்னலெட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசுத் தின வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர், மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோட்டு ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.