தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில், 3வது வார்டு ஹவுசிங் போர்டு நலச்சங்கம் சார்பில் 77வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


இவ்விழாவில், மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலரும் ஹவுசிங் போர்டு நலச்சங்கத்தின் தலைவருமான ரெங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் சட்ட ஆலோசகர் விஜய் சுந்தர், நலச்சங்க செயலாளர் பாலு, ராஜ சேகர், மக்புல் பாட்ஷா, பால சந்தர், வின்சென்ட், செல்வராஜ், ராஜாமணி, டேவிட் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.