ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி அருகே கீதா ஜீவன் நகர் மற்றும் ஜாஹிர் உசைன் நகரை சேர்ந்த நரேன் ஸ்ரீ கார்த்திக் (12), திருமணி (13), முகேந்திரன் (12) ஆகிய சிறுவர்கள் மொட்டை கோபுரம் கடற்கரையில், சிலுவையார் கிபி கடற்கரை பூங்கா அருகே கடலுக்கு குளிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை அறிந்த ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, உயிரிழந்த சிறுவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இழப்பால் மனமுடைந்துள்ள பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் தைரியம் அளித்து, இந்த துயர சம்பவத்தில் தானும் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், இதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் TTC.ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், ஒன்றிய துணை செயலாளர் கணேசன், பகுதி செயலாளர் சிவகுமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தங்கம், முன்னாள் வார்டு உறுப்பினர் பாரதிராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.