பண்டாரம்பட்டி பகுதியில் உள்ள TNDTA தொடக்கப் பள்ளியில் இன்று 77-வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி குடியரசு தின விழாவை தொடங்கி வைத்தார்.
விழா பள்ளி தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றப்பட்டு, மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு விழாவின் மகிழ்ச்சி பகிர்ந்துக்கொள்ளப்பட்டது.
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற பெருமைக்குரியவராகவும், கல்வித் துறையில் சிறப்பான சேவைக்காக மாநில விருதுகளை பெற்றவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு குடியரசு தின விழாவை சிறப்பித்தனர்.