ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனை தொடர்ந்து பெரிய செல்வன் நகர், பவிச்ரீ நகர் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் மூலம் துரிதமாக மழைநீர் வெளியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தெருக்களில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய சரள் மண் மூலம் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து மேற்கு காமராஜர்நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றப் பணிகளையும், கே.வி.கே.சாமி நகர் மற்றும் மேற்கு காமராஜர் நகர் பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாமையும் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோட்ராஜா, ஒன்றிய பொறியாளர் ரவி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் T.T.C. ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மிக்கேல் அருள் ஸ்டாலின், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் நெல்சன், சுற்றுச்சூழல் அணி ராஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன், கிளைச் செயலாளர் ஜேசுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மாப்பிள்ளையூரணி – காமராஜர்நகர் பகுதிகளில் மழைநீர் பிரச்சனைக்கு துரித தீர்வு : சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பூபால்ராயபுரத்தில் புதிய மீன் ஏலக்கூடத்தை ஆய்வு செய்த மேயர் ஜெகன்!!
அடுத்த
“தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் ‘ஸ்ரீ ஓம் அய்யனார் விலாஸ்’ – தரமும் சுவையும் சேரும் புதிய உணவின் உதயம்”
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026