தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு க. ஸ்டாலின் ஆணைப்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில்,
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், கழக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பரமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரது வழிகாட்டுதலின்படி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்பிக்நகர் பகுதி ராஜீவ் நகர் பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞரன் 102 வது பிறந்த நாள் மற்றும் தி.மு.க அரசின் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தலைமை கழக பேச்சாளர் பொன்னரசு, தலைமை கழக இளம் பேச்சாளர் அன்றோ வளர்பிரைட்டன் ஆகியோர் கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்து கூறினார்கள்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பால்துரை, மிக்கேல் அருள் ஸ்டாலின் பகுதி செயலாளர் ஆஸ்கார், இளைஞரணி அமைப்பாளர் ராஜ், வட்ட செயலாளர்கள் கருப்பசாமி, மைக்கேல்ராஜ், சுப்பிரமணியன், வசந்திபால்பாண்டி, மகளிரணி நிர்வாகிகள் மாலாசின்ஹா, சித்திரைபுஷ்பம், கல்பனா மற்றும் இளைஞரணி மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.