தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று பரபரப்பான நிலை ஏற்பட்டது.

திருச்செந்தூர் ஆலந்தவை அசுக்குழை குடியிருப்பைச் சேர்ந்த எம். பட்டுநாச்சியார் (50) என்ற பெண், தனது மகன் மணிகண்டனை காதல் தொடர்பு காரணமாக நட்டார் என்பவர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறி, அதற்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர் அளித்த மனுவில், “எனது மகன் மணிகண்டனை நட்டார் குடும்பத்தினர் சேர்ந்து 35 முறை குத்தி கொலை செய்தனர். இதில் முக்கிய குற்றவாளி கட்டார் என்பவர் ஜாமினில் வெளியில் வந்து மீண்டும் எங்கள் குடும்பத்தினரை மிரட்டிக் கொண்டிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் நிலையில் உள்ளோம். எனவே எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கி, குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,”

என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், திருச்செந்தூர் டிஎஸ்பி அலுவலகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், சில போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு வழக்கை பாதிக்க முயற்சி செய்கிறார்கள் என்றும், இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த தர்ணா போராட்டத்தால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.