பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் (செப்டம்பர் 17) விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சேவை வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 17 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சேவை நாட்களின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் இன்று (செப்.27) பிரதமர் பிறந்த தின ஆயுஷ் ஹோமம் நிகழ்ச்சி வடக்கு ரதவீதியில் உள்ள DA திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நலன்தரும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டதுடன், 200 பேருக்கு வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஆன்மீகப் பிரிவு மாநில துணைத் தலைவர் நெல்லையம்மாள், கிழக்கு மண்டலத் தலைவர் ராஜேஷ் கனி, மண்டல பொதுச் செயலாளர் லட்சுமி, வேல்கனி கொரைரா, பாலமுருகன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் சக்திவேல், மகளிர் அணி மாவட்டத் தலைவி வெள்ளத்தாய், ஆன்மீகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஓம் பிரபு, மருத்துவப் பிரிவு தலைவர் பாலாஜி, மகளிர் அணி மண்டலத் தலைவி செல்வி சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.