திருநாள் சிறப்பை ஒட்டி கார்த்திகை 9-ஆம் தேதி (25.11.2025) செவ்வாய்க்கிழமை ஸ்ரீசித்தர் பீடத்தில் மதியம் 1.30 மணி முதல் ஶ்ரீ வாராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை, அபிஷேகம், மஹா யாகம் மற்றும் மஹா அன்னதானம் மிக வேலான நடத்தப்பட்டது.
ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் நடைபெற்ற ஆன்மிக வைபவத்திற்கு “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையேற்று, பக்தர்கள் நலனும், உலக அமைதியும், வளமான வாழ்வும் நிலைக்க வேண்டி முழுநாள் சிறப்பு யாக வழிபாடுகள் கோலாகலமாக நடத்தப்பட்டன.
உலகில் அன்பு, அமைதி நிலைக்கவும், விவசாயம் மற்றும் அனைத்து தொழில்களும் சிறக்கவும், பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் ஶ்ரீ வாராஹி அம்மனுக்கு 64 வகை அபிஷேகங்கள் — பால், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்டவை — சிறப்பாக செய்யப்பட்டது. பின்னர் ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை போன்ற மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
மதிய நேரத்தில் பக்தர்களுக்கான மஹா அன்னதானம் வழங்கப்பட்டு, அதில் திரளான பக்தர்கள் கலந்து ஆன்மிக புண்ணியத்தை பெற்றனர். இந்த மாபெரும் ஆன்மிக நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக் குழுவினர் சிறப்பாக மேற்கொண்டனர்.
தூத்துக்குடி
ஸ்ரீசித்தர் பீடத்தில் பிரத்தியங்கிரா தேவி மஹா யாகம் — சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்ற வைபவம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் PUCL தலைமையில் SIR நடைமுறை மீதும் வழக்கறிஞர் தாக்குதல்மீதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி புஷ்பா நகர் மழைநீர் நிலையை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026