தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி புஷ்பா நகர் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் தேங்கியிருந்த மழைநீர் நிலையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பகுதி மக்களின் கோரிக்கையை தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக தீயணைப்பு துறையின் உதவியுடன் மழைநீர் வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அவ்வழியாக நீர்த்தேக்கம் அகற்றப்பட்டு, மக்கள் சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பகுதியில் உள்ள முக்கியச் சாலைகள், குடியிருப்பு பகுதிகள் ஆகிய அனைத்திலும் ஏற்பட்டிருந்த நீர்த்தேக்கம் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் நேரடியாக அறிவுரைகள் வழங்கி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளும்படி கட்டளையிட்டார்.
மழை காரணமாக மக்கள் எவ்வித சிரமமும் அனுபவிக்க வேண்டாம் என்பதை உறுதி செய்வதே தமது முதன்மைக் கடமை என அமைச்சர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி புஷ்பா நகர் மழைநீர் நிலையை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீசித்தர் பீடத்தில் பிரத்தியங்கிரா தேவி மஹா யாகம் — சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்ற வைபவம்!!
அடுத்த
அண்ணா நகர் பிரதான சாலையில் சீரமைப்பு பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026