தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு திமுக கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குக் குழு தலைவரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி ஏற்பாடு செய்திருந்தார். கலியா லாவோ பூங்காவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் சேவியர், கேடிசி செல்வராஜ், இபி செல்வராஜ், கோபால், வீரப்பன், ராஜாமணி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், நகரை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணும் தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சி தூய்மை பணியாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.