தூத்துக்குடி மாநகராட்சி 60-வது வார்டு லேபர் காலனி பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், பொதுமக்களின் முக்கிய அடிப்படை வசதியான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வலியுறுத்தியும்,
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கங்களைக் கட்டுப்படுத்தி, பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும்,

தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். 