சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய ஒரு மாணவரின் தந்தை “கல்விக்காக பல உதவிகளைச் செய்து வரும் த.வெ.க தலைவர் விஜய்யை ’இளம் காமராஜர்’ என்று அழைக்கலாம்” எனப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக வெற்றி கழகத்தினர் இளைய காமராஜர் விஜய் என AI போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் இருக்கையில் விஜய் அமர்ந்து நிலையிலும் காமராஜர் நிற்பது போன்ற போஸ்டர் இடம் பெற்றுள்ளது. காமராஜரை நேசிக்கும் உலகத்தில் உள்ள அனைத்து உள்ளங்களுக்கும் மன வேதனையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த நிகழ்வால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போஸ்டரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது.
இந்த நிகழ்வு நடந்ததற்கு முதல் கண்டன குரலா பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் சமூக நீதி போராளி எஸ்.பி. மாரியப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில் அவர் கூறியதாவது :-
காமராஜரின் சரித்திரம், பெருமை, தகுதி பற்றி சரியான புரிதல் இல்லாதவர்களே இப்படி நினைக்கிறார்கள். இதனையடுத்து விஜய்யை காமரஜருடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டதற்கு பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும்.
இது போன்ற நிகழ்வு இனி நடைபெறாத வண்ணம் செயல்பட வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் தமிழக முழுவதும் போராட்டம் நடைபெறும் எனவும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவன எஸ்.பி. மாரியப்பன் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் இளைய காமராஜர் என, தன்னை அழைக்க வேண்டாம் என த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு, த.வெ.க., சார்பில், மூன்றாம் கட்ட விருது வழங்கும் விழா, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், நேற்று நடந்தது.
மாணவ, மாணவியருக்கு விருதுகள் வழங்கி அவர்களின் பெற்றோர், குடும்பத்தினருடன், த.வெ.க., தலைவர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், “இங்கு வந்திருப்போர் மட்டுமல்ல; வராமால் இருக்கும் கட்சியினர் அனைவரும் கூட பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். “என்னை ‘காமராஜர்’, இளைய காமராஜர்’ என பட்டம் சூட்டியும் யாரும் பேச வேண்டாம். தாங்கள் படித்த பள்ளி, ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் பேசலாம்,” என்றார். தற்போது விஜய் இளைய காமராஜர் என்று தன்னை அழைக்க வேண்டாம் என பகிரங்கமாக தெரிவித்தது பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்புக்கு கிடைத்த வெற்றி எனலாம் என்று தெரிவித்த அதன் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் கூறும்போது கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பற்றி விமர்சனங்கள் வந்த மறுநிமிடமே பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் கடும் கண்டறியத்தை தெரிவித்தது. இது போன்று இனி ஒரு சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் இருக்க வேண்டும் என எஸ்.பி. மாரியப்பன் தெரிவித்தார்.
தூத்துக்குடி
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் கண்டன அறிக்கை எதிரொலி - தவெக தலைவர் விஜய் " இளைய காமராஜர் " என்று என்னை அழைக்க வேண்டாம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் உமரிக்கோட்டை ஊராட்சி வரதராஜபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை எம்.சி. சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
அடுத்த
அதிமுக பாக செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026