தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் உமரிக்கோட்டை ஊராட்சி வரதராஜபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை துவக்க விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான எம்.சி. சண்முகையா கலந்துகொண்டு பகுதி நேர ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் கூட்டுறவு சார் பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், செயலாட்சியர் சாம் டேனியல், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைக்கோட்ராஜா, வருவாய் ஆய்வாளர் அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர் புதூர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் நாராயணன், மாவட்ட பிரதிநிதி கணேசன், கோபால்,
சிவலூர் மாரிச்செல்வன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் முடிவை பா. ஆறுமுகம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பலவேசம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் R.J. வசந்த், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண், கிளைச் செயலாளர்கள் சின்னராஜா,
ஒன்றிய பொருளாளர் சின்னராஜா, மத்திய ஒன்றிய துணை செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன்,  உமரிக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், மேலத்தட்டப்பாறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாரியப்பன், ஒப்பந்தக்காரர் கருப்பசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உமரிக்கோட்டை ஊராட்சி வரதராஜபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி தந்த சண்முகையா எம்.எல்.ஏவிற்கு  ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.