தூத்துக்குடி அரசு மருத்துவமனை குருதி மையம் சார்பில் உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் முன்னிலையில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு தங்களது குருதிகளை தானமாக வழங்கிய கொடையாளர்களுக்கு அமைச்சர் மற்றும் ஆட்சியர் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலேஷ், மற்றும் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.