தூத்துக்குடியில் மாபெரும் கலை விழாவான நெய்தல் விழா ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் இணைந்து நடத்தும் நெய்தல் விழா பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் இன்று மாலை தொடங்கி மூன்று நாட்கள் (13,14,15.06.2025) வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
முதல் நாளான ஜூன் 13 ம் தேதியான இன்று மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி சார்பில் மங்கல இசையுடன் நெய்தல் கலை விழா ஆரம்பம் ஆனது.
6.30 மணிமுதல் 7.00 மணிவரை நெய்தல் தொடக்க விழா நடைபெற்றது. தொடக்க விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். நபார்டு இம்மானுவேல் கணேசன், கிரீன் ஸ்டார் இயக்குனர் செந்தில் நாயகம் ஆகியோர் துவக்கவுரை ஆற்றினார்கள். காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தூத்துக்குடி ஆட்சியர் இளம் பகவத் வாழ்த்துரை வழங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் சிறப்புரை ஆற்றினார். பாராளுமன்ற உறுப்பினரும், தென்மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழி கருணாநிதி விழா தலைமையுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் எம்.பி. விஜிலா சந்தியானந்த், ஏ.பி.சி. சண்முகம், சட்டமன்ற உறுப்பினர் தமிழரச, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், கவுன்சிலர்கள், கழக செயலாளர்கள், பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் நன்றியுரை நிகழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து 7.15 மணிமுதல் 7.45 மணிவரை அலங்காநலூர் சமர் கலைக்குழு நிகழ்ச்சியும், 7.45 மணிமுதல் 8.15 மணிவரை அபிநயா நிருத்தாலயா திருநங்கை கலைக்குழு நிகழ்ச்சியும், 8.15 மணிமுதல் 9.00 மணிவரை பால் ஜேக்கப்பின் ஃபங்கி போதி நிகழ்ச்சியும், 9.00 மணிமுதல் 10.30 மணிவரை சோல்டவுட் இசைக்குழு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஜூன் 14 ம் தேதியான நாளை சனிக்கிழமை மாலை 5.45 மணிமுதல் 6.15 மணிவரை தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு நிகழ்ச்சியும், 6.15 மணிமுதல் 6.45 மணிவரை அபிநயகீதம் பல்சுவை கலை நிகழ்ச்சியும், 6.45 மணிமுதல் 7.15 மணிவரை குமார ராமன் தேவராட்டம் கலைக்குழு நிகழ்ச்சியும், 7.15 மணிமுதல் 7.45 மணிவரை கொங்கு பண்பாட்டு மையம் நிகழ்ச்சியும், 7.45 மணிமுதல் 8.15 மணிவரை மாலன் மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழு நிகழ்ச்சியும், 8.15 மணிமுதல் 8.45 மணிவரை விவேகானந்தா கிராமிய கலைக்குழு நிகழ்ச்சியும், 8.45 மணிமுதல் 10.30 மணிவரை மெட்ராஸ் ஜங்ஷன் இசைக்குழு சாம் விஷாலுடன் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஜூன் 15 ம் தேதியான நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 5.45 மணிமுதல் 6.15 மணிவரை தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி நிகழ்ச்சியும், 6.15 மணிமுதல் 6.45 மணிவரை நெய்தல் நிறைவு விழா நிகழ்ச்சியும், 6.45 மணிமுதல் 7.15 மணிவரை நெய்தல் கலைக்குழு நிகழ்ச்சியும், 7.15 மணிமுதல் 7.45 மணிவரை கலைவாணர் பெருமுரசு கலைக்குழு நிகழ்ச்சியும், 7.45 மணிமுதல் 8.15 மணிவரை உவரி களியல் கலைக்குழு நிகழ்ச்சியும், 8.15 மணிமுதல் 8.45 மணிவரை உரு பாணர், பண் மீட்டும் தமிழிசைக்குழு நிகழ்ச்சியும், 8.45 மணிமுதல் 10.30 மணிவரை ஃபோக் மார்லின் அந்தோணியின் இசைக்குழு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் தொடங்கியது நெய்தல் கலை விழா!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பணராஸ் பல்கலைக்கழக தத்துவம், வரலாறு மற்றும் தமிழ்த்துறை பிரிவு மாணவ, மாணவிகள் 30 பேர் கொண்ட குழு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்கு வருகை!!
அடுத்த
உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கீதா ஜீவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026