அதிமுக கழக பொதுச்செயலாரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கழக வர்த்தக அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் முன்னிலையில் பம்மல் பகுதி கழகத்திலும் அனங்காபுத்தூர் பகுதி கழகத்திலும் பூத் வாரியாக பாகச் செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுடனான புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர். ப. தன்சிங் Ex.MLA, பம்மல் பகுதி கழக செயலாளர்கள் அப்பு (எ) வெங்கடேசன், ஜெகநாதன், அனங்காபுத்தூர் பகுதி கழக செயலாளர் முன்னாள் சேர்மன் வேலாயுதம் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளுடன் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன், வட்ட பிரதிநிதி அய்யப்பன், விக்னேஷ் பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.