பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதிமுக சார்பில் காய்கனி மார்க்கெட் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பேரறிஞர் அண்ணாவின் திராவிடக் கொள்கைகள் மற்றும் சமூக நீதி சிந்தனைகள் நினைவுகூரப்பட்டன.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, மதிமுக வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் பேச்சி ராஜ், மாநகர அவைத் தலைவர் தொம்மை, மாநகர துணை செயலாளர் முருகேசன், இளைஞரணி அமைப்பாளர்கள் சரவணப்பெருமாள், பாலசுப்பிரமணியன், எம்எல்எப் குமார், மதிமுக பிரதிநிதி பொய்யாமொழி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு அண்ணாவின் நினைவுக்கு மரியாதை செலுத்தினர்.