தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, புதூர் கிழக்கு ஒன்றியம், இராமச்சந்திராபுரம் கிராமத்தில் கழக இரு வண்ணக் கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு கழகக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழர் திருநாளான பொங்கல் அனைவரின் வாழ்விலும் வளமும் நலனும் பெருகும் நன்னாளாக அமைய வேண்டும் என அவர் வாழ்த்தினார்.


இந்த நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மேலும் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாக்கண்ணு, முத்துலட்சுமி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், வடக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் சௌந்தரராஜன், புதூர் கிழக்கு ஒன்றிய பொருளாளர் கோசலைராம், இராமச்சந்திராபுரம் கிளை செயலாளர் காந்தி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை மற்றும் வார்டு நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


இதனைத் தொடர்ந்து தைத்திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை, G.V. மார்கண்டேயன் கழக நிர்வாகிகளுடன் இணைந்து நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தைத்திருநாளின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன், மாவட்ட வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் தொடர்பான கருத்துகளும் பரிமாறப்பட்டன.