தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுகவில் பாண்டியபதி பரதவர் சமுதாய மக்களின் ஒருவரை மாவட்ட செயலாளர், பதவிக்கும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்கள் சமுதாய மக்களின் ஒருவரை தேர்வு செய்து சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். என்று பாண்டியபதி பரதவர் நல தலைமை சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாண்டியாபதி பரதவர் நல தலைமை சங்கம் சார்பில் கூறியதாவது :-



திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லை மாநகர செயலாளராக வழக்கறிஞர் A.L.B. தினேஷ் பர்னாந்து ராதாபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளராக க. எரிக் ஜூடு பாண்டியன் ஆகியோரை தாங்கள் நியமித்தமைக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.  

பரதவர் பழங்குடி பாரம்பரிய மீனவ மக்களாகிய நாங்கள் தமிழகம் முழுவதும் பரவி, சுமார் 1.20 கோடி மக்களாக வாழ்ந்து வருகின்றோம்.  சாதிவாரி கணக்கெடுப்புகள் நடக்கும் பொழுது, இவையாவும் உண்மையென புலப்படும். தாங்கள், தங்களின் கட்சியின் உள்கட்டமைப்பினை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, இரண்டு சட்டமன்ற தொகுதிகளை  உள்ளடக்கிய மாவட்டங்களாக பிரிக்க உள்ளதாக அறிகின்றோம்.


தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்தவரையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 90 ஆயிரம் பரதவ மக்கள் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 65 ஆயிரம் பரதவ மக்கள் வாக்காளர்களாக உள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஒன்றில், தங்கள் கட்சியில் உள்ள பரதவர் ஒருவருக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவிக்க வேண்டுகின்றோம்.                             

தாங்கள் இந்த அறிவிப்பினை செய்யும் பட்சத்தில், மற்ற அரசியல் இயக்கங்களுக்கு, தங்களின் இந்த செயல்பாடு உண்மையான சமூக பிரதிநித்துவத்திற்கு, ஒரு உண்மையான நல்ல முன்னுதாரணமாக அமையும் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
என்று பாண்டியபதி பரதவர் நல தலைமை சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.