தூத்துக்குடியில் இன்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று (19.04.2025) தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட் காமராஜ் சிலை அருகில் தெட்சிணாமூர்த்தி நாடார் சங்கம் முன்னாள் நிர்வாகிகள் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

இதில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள சிவந்தி ஆத்தினார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய மாவட்ட தவெக நிர்வாகிகள், தவெக தோழிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.