தூத்துக்குடி வ.உ.சி. மைதானத்தில் நேற்று முன்தினம் நெய்தல் கலை திருவிழா கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏக்கள், முன்னாள் சபாநாயகர், முன்னாள் எம்.பி, மேயர், ஆணையர், உட்பட பலர் முன்னிலையில் தொடங்கியது.

இன்று நெய்தல் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான சண்முகையா எம்.எல்.ஏ. மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை  ஒருங்கிணைத்து வருகின்றனர். ஜூன் 15 ம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை 5.45 மணிமுதல் 6.15 மணிவரை தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது .

அதைத்தொடர்ந்து 6.15 மணிமுதல் 6.45 மணிவரை நெய்தல் நிறைவு விழா நிகழ்ச்சியும், 6.45 மணிமுதல் 7.15 மணிவரை நெய்தல் கலைக்குழு நிகழ்ச்சியும், 7.15 மணிமுதல் 7.45 மணிவரை கலைவாணர் பெருமுரசு கலைக்குழு நிகழ்ச்சியும், 7.45 மணிமுதல் 8.15 மணிவரை உவரி களியல் கலைக்குழு நிகழ்ச்சியும், 8.15 மணிமுதல் 8.45 மணிவரை உரு பாணர், பண் மீட்டும் தமிழிசைக்குழு நிகழ்ச்சியும், 8.45 மணிமுதல் 10.30 மணிவரை ஃபோக் மார்லின் அந்தோணியின் இசைக்குழு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.