தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காலை போக்குவரத்துத்துறை சார்பில் புதிய விரிவான மினிபஸ் பேருந்து திட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 27 புதிய விரிவான மினிபஸ் பேருந்து சேவை வழித்தடத்தையும் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விரிவான மினிபஸ் பேருந்து சேவை தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், புதிய விரிவான மினிபஸ் பேருந்து சேவையை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் அருண்குமார், கவுன்சிலர் கீதா முருகேசன், சண்முக புரம் பகுதி செயலாளர் சுரேஷ்குமார், அவைத் தலைவர் செல்வராஜ், உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் விரிவான புதிய மினிபஸ் பேருந்து சேவை ஆணையை விளாத்திகுளம் எஸ்.வி.எம்.ஆர். டெக்ஸ்டைல்ஸ் மேனேஜர் மாரிமுத்து, கண்ணன் டிரான்ஸ்போர்ட், மினிபஸ் உரிமையாளருமான முரளி மனோகர் உட்பட மினிபஸ் உரிமையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் விரிவான புதிய மினிபஸ் பேருந்து சேவை ஆணையை பெற்றுக் கொண்டனர்.

