ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா தலைமையில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டன.
கீழக்கோட்டை ஊராட்சி கோவிந்தாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணியை எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதேபோல், கலப்பைபட்டி ஊராட்சி அம்மாள்பட்டி கிராமத்தில் ரூ.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணியையும் எம்.சி.சண்முகையா தொடங்கி வைத்தார். மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலான இப்பணிகள் மூலம் உள்ளூர் பொதுமக்கள் பலன் பெறவுள்ளனர்.
நிகழ்ச்சியில் வட்டாச்சியர் அப்பனராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம், வருவாய் ஆய்வாளர் ரமேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் காளி, கிளை செயலாளர்கள் இசக்கிமுத்து, முருகன், ஜோசப், இளைஞரணி டேனியல் உள்ளிட்டோர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் வேப்பன்குளம் கிராமத்தில் 67 பயனாளிகள், கலப்பைபட்டி கிராமத்தில் 30 பயனாளிகள், அம்மாள்பட்டி கிராமத்தில் 24 பயனாளிகள், இளவேலங்கால் கிராமத்தில் 39 பயனாளிகள் என மொத்தம் 160 பேருக்கு எம்.சி.சண்முகையா இலவச பட்டாக்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியிலும் வட்டாச்சியர் அப்பனராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம், வருவாய் ஆய்வாளர் ரமேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் காளி, மகளீரணி பாக்கியலெட்சுமி, சுந்தரி, கிளை செயலாளர்கள் குட்டிசாமி, இசக்கிமுத்து, முருகன், ஜோசப், இளைஞரணி டேனியல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.