தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சார்பில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் 5 கிராமங்களைச் சேர்ந்த 194 பயனாளிகளுக்கு இலவச இ-பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தின் பயனாளிகள் கூட்டுடன்காடு, குமாரகிரி, கீழ தட்டாப்பாறை, உமரிக்கோட்டை மற்றும் அல்லிகுளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா 194 பயனாளிகளுக்கும் இலவச இ-பட்டாக்களை வழங்கினார். நிகழ்வில் வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர்கள் ஹரி பாலகிருஷ்ணன், நாராயணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாராயணன், கிளைச் செயலாளர்கள் கல்லாத்தான், செல்வம், சேரந்தையன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


சிறப்பு வரன்முறை திட்டத்தின் மூலம் பல ஆண்டுகளாக நில உரிமை சான்று பெற முடியாமல் இருந்த குடும்பங்களுக்கு இ-பட்டா வழங்கப்பட்டதால் பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.