தூத்துக்குடி மாநகராட்சி சுகம் ஹோட்டல் எதிரே உள்ள ஆவின் பாலகம் கடை திறப்பு விழா இன்று ( 31.03.2025) நடைபெற்றது.

முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோட்டு ராஜா ஏற்பாட்டில் திறக்கவிருந்த ஆவின் பாலகம் கடை திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆவின் பொது மேலாளர் ராஜ குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மற்றும் கவுன்சிலர்கள் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் அன்னலெட்சுமி கோட்டு ராஜா சிறப்பாக செய்திருந்தனர்.