முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரைத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் முருகனின் ஜன்ம நட்சத்திரமான வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று வைகாசி விசாக பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஆண்டு முழுவதும் முருகப்பெருமானை தரிசனம் செய்தால் கிடைக்கக் கூடிய பலன், வைகாசி விசாக திருநாளன்று வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம் அத்தகைய பிரசித்தி பெற்ற வைகாசி விசாக திருவிழா நாளை மறுநாள் ஜூன் 9 ம் தேதி நடக்கிறது. அந்த நாளில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவது வழக்கம்,
அதிலும் குறிப்பாக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்நிலையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தூத்துக்குடி முள்ளக்காடு இளைஞரணி ஏற்பாட்டில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு உணவு பொட்டலம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் முள்ளக்காடு தொழிலதிபர் பி. ராஜ்குமார் தலைமையில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எஸ். பொன் ராம்நாதன், எஸ். விஜயகுமார், எம். பொன் ராஜேஷ்குமார், என். ஜெயபால், பி. பாலமுருகன், எஸ். அருண் காமராஜ், பி. சௌந்தர், எம். அருண்குமார் உட்பட முள்ளக்காடு இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
