பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 9 மணியளவில் மட்டக்கடை சந்திப்பில் தூத்துக்குடி மத்திய மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் ராகுல் காந்தி பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் 55 பேருக்கு வேஷ்டி, சேலை, அரிசி, கிரைண்டர், எவர்சில்வர் டிபன் பாக்ஸ் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாமன்ற உறுப்பினர் எடின்டா, நெப்போலியன், நவரோச், ஐசன், சில்வா ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநிலத் துணைத் தலைவர் A.P.C.V. சண்முகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி ஆகியோர் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ், மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், மாவட்டத் துணைத் தலைவர்கள் பிரபாகரன், ஜோசப் அரவிந்த், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, கிருஷ்ணன், முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவி முத்து விஜயா, அமைப்புசாரா மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி, இளைஞர் காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவி கமலா தேவி, குமார முருகேசன், மீனவராணி மாநகர் மாவட்ட தலைவர் மைக்கேல், வார்டு தலைவர்கள் அந்தோணிசாமி, அலெக்ஸ், ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க மாநில அமைப்புச் செயலாளர் சுடலை, ராஜா, சரஸ்வதி நாதன், ராமமூர்த்தி, கணேசன், ரெனிஸ் பாபு, ஜெயமணி சுரேஷ், கணேசன், முத்துராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
