பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 202 இடங்களை வென்றதன் மூலம் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஐக்கிய ஜனதாதளம் (JDU) கட்சி தலைவர் நிதிஷ்குமார் 10வது முறையாக பீகார் மாநில முதல்வராக பதவியேற்றார்.
நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் பொறுப்பேற்ற மகிழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் மணிநந்தன் ஆலோசனையிலும், மாநில தொழிலாளர் அணி தலைவர் தாமரை வெங்கடேசன் வழிகாட்டுதலிலும், மாவட்ட தலைவர் டி.எம். குழந்தைபாண்டி தலைமையிலும், கட்சியினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றி மகிழ்ச்சி பகிரப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ஆர். மேகாஸ், மாவட்ட செயலாளர் மாரியப்பன், விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ஆதிலிங்கம், வடக்கு மண்டல தலைவர் அற்புதமணி, துணைத்தலைவர் ராசுக்குட்டி, கயத்தாறு ஒன்றிய பொருளாளர் முருகேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பீகாரில் சாதனை படைத்த நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றதை ஒட்டி தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம், கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி
பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர்: தூத்துக்குடியில் ஐ.ஜ.த. உற்சாக வெற்றி கொண்டாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உலக மீனவர் தினத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்ட விழா – தூத்துக்குடி துறைமுகம் உற்சாகம்!!
அடுத்த
விபத்தில் காயம் அடைந்த திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026