தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் இன்று பழைய மாநகராட்சி வளாகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும், ஆணையர் பிரியங்கா முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் நிலவும் குறைகளை மனுவாக வழங்கினர்.

இதில், தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தின் சார்பில் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

மனுவின் முக்கிய கோரிக்கை சங்கத்துக்கு சொந்தமான 3.5 சென்ட் இடத்தை, பாலகிருஷ்ணன் என்ற ஒருவர் போலியாக தன்னுடைய சொத்தாக பட்டா தயாரித்து, மாநகராட்சியில் தவறாக தீர்வை ரசீது பெற்றுள்ளார். அந்த போலியான தீர்வை ரசீதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சங்கம் கோரிக்கை வைத்தது.

மனுவை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, உரிய பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.