தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியம், இராமச்சந்திராபுரம் ஊராட்சி, K.சுப்பையாபுரம் கிராமத்தில் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கட்டிடத்தை திறந்து வைத்தார்.


இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், ஒன்றிய பொறியாளர்கள் ரவி, ஆனந்தவேல், மாவட்ட பிரதிநிதிகள் வேலுச்சாமி, முருகேசன், வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம், இராமச்சந்திராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாலட்சுமி, கிளைச் செயலாளர்கள் முருகன், சுப்பையா, சதீஷ்குமார், கிளை பிரதிநிதி சித்தமல்லு, கிளை அவைத்தலைவர் சித்துரெட்டி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காளிதாஸ், பாக முகவர் சுரேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து, விளாத்திகுளம் வட்டம், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது. முகாமை தொடங்கி வைத்த G.V. மார்கண்டேயன், முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து பார்வையிட்டு பயனாளிகளுக்கு முகாம் அட்டைகள் வழங்கினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டன.


இந்த நிகழ்வில் கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா விஸ்வநாதன், பள்ளி தலைமையாசிரியர் தபசுமுத்து, விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், பொறுப்பு தலைமையாசிரியர் செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் R.P.முருகேசன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, கிளைச் செயலாளர்கள் ஜான்சன், பேச்சிமுத்து, வேல்முருகன், பரமசிவ பாண்டியன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் முனியசாமி, பாக இளைஞரணி அமைப்பாளர் சதீஷ், ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் முத்துச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சமுதாய நல செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.