தமிழ்நாடு வனத்துறை தூத்துக்குடி வனக்கோட்டம் சார்பில், வளமும் வன உயிரினங்களுக்கான பாதுகாப்பும் – சவால்கள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், வன வள பாதுகாப்பின் அவசியம், வன உயிரினங்களை பாதுகாப்பதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு, சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும், இத்தகைய பயிற்சிகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வனத்துறை அதிகாரிகள், கல்வித் துறை பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.