தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட பொதுப் பயன்பாட்டு வசதிகள் திறந்து வைக்கப்பட்டன. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பி.கீதா ஜீவன் புதிய பேருந்து நிறுத்த நிழல் குடைகள் மற்றும் ரேஷன் கடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
பீச் ரோடு S.E.P.C முன்பு அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்த நிழல் குடை திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து புதுகிராமம் மாட்டுஆஸ்பத்திரி அருகில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடமும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை நர்சிங் காலேஜ் அருகில் போல்டன் புரம் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்த நிழல் குடையும், சில்வர் புரம் லூசியா இல்லம் அருகில் மீளவிட்டான் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மற்றொரு புதிய நிழல் குடையும் திறந்து வைக்கப்பட்டன.
இந்த வசதிகள் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், முதியோர் மற்றும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உட்பட நிர்வாகிகள், பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.