தூத்துக்குடி மேலச்சண்முகபுரம் தங்கையா நாடார் தெரு, வண்ணார் 3 வது தெரு தொடர்ச்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் கொடை விழாவானது (22.06.2025 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி (02.07.2025) புதன்கிழமை வரை சிறப்பாக நடைபெறுகிறது.


(24.06.2025) நேற்று முன்தினம் காலை 7.35 மணிக்கு மேல் கணபதி ஹோமம், கும்பபூஜை, புண்யாவாஸனம், நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணியளவில் கொடை விழா கால் நாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணியளவில் சிலம்பு கண்ணன் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும், இரவு 8 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.


இரண்டாம் நாள் நிகழ்ச்சியான நேற்று இரவு 7 மணியளவில் ஆன்மீக செம்மல் நல்லாசிரியர் விஜய செல்வி திருமணி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. 8 மணியளவில் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு விளக்கேற்றி திருவிழாக் பூஜையை தொடங்கி வைத்தார். அமைச்சருக்கு திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல தலைவி அன்னலட்சுமி ஆகியோர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.

திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு தங்க நாணயம், வெள்ளி விளக்கு, பித்தளை விளக்கு, ஆறுதல் பரிசாக சேலை, வாட்ச், பால் குக்கர், சேர், போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மருத்துவரணி அமைப்பாளர் அருண்குமார், தலைவர் & தர்மகர்த்தா முன்னாள் கவுன்சிலரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான கோட்டு ராஜா, பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், செயலாளர்கள் ஞானராஜ், பொன்ராஜ், எஸ்.ஜி பொன்ராஜ், செல்வராஜ், மாரி செல்வ ஈஸ்வரன், துணைத் தலைவர்கள் வி.எஸ்.எஸ். பிரபு, தாமஸ், பொன்ராஜ், குமாரவேல், கண்ணன், துணைச் செயலாளர்கள் முருகேசன், கனக மாரியப்பன், சதீஷ்குமார், மனோராஜ், ராஜசேகர், பொருளாளர் பழனிக்குமார், கௌரவ ஆலோசகர்கள் எம்.பி.டி. செல்வராஜ், விஜயராஜன், சட்ட ஆலோசகர்கள் நாகராஜ், மதனகோபி, மற்றும் கோவில் வரி வசூல் கமிட்டியாளர்கள் கொடை விழா அலோ சேகர்கள் கொடை விழா கமிட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


நாளை (26.06.2025) வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் கலைச் செல்வி சொற்பொழிவு நிகழ்ச்சியும், இரவு 8 மணியளவில் சிறப்பு பூஜையும், (27.06.2025) வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ரவிக்குமார் ஆன்மீக சொற்பொழிவு, 8 மணியளவில் சிறப்பு பூஜை 9 மணியளவில் நெல்லை ஆனந்த் கும்மி பத்மநாதன் குழுவினரின் கும்மி பாடல் நிகழ்ச்சியும்,

(28.06.2025) சனிக்கிழமை ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமி கேந்திர பஜனை, சந்திரலேகா (எம்.பி.எம் பிரதர்ஸ்) சங்கீத பக்தி இன்னிசை கச்சேரி, மற்றும் சிறப்பு பூஜையும், (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை மதுரை தமிழரசி குழுவினரின் கிராமிய கும்மி பாட்டு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜையும், (30.06.2025) தீர்த்தக்கரை செல்லுதல், லெட்சுமணன் பிரதர்ஸ் கனியான் நிகழ்ச்சி, அம்பாள் மற்றும் சுவாமிக்கு கும்பம் ஏற்றுதல், மற்றும் சிறப்பு பூஜையும், 


(01.07.2025) அருள்மிகு ஸ்ரீ கன்னி விநாயகர் கோவிலில் இருந்து நேமிஷம் மற்றும் பால்குடம் எடுத்து வருதல், அம்மன் மற்றும் சுவாமிகள் சிறப்பு அலங்காரம், மதிய கொடை, அன்னதானம் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் ஊர் சுற்றி வருதல், முளைப்பாரி மாவிளக்கு எடுத்து ஊர் சுற்றி வருதல், வில்லிசை நிகழ்ச்சி சாம கொடை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும்,

(02.07.2025) புதன்கிழமை சப்பரம் ஊர் சுற்றி வந்தவுடன் பொங்கலிட்டு, மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். சிறப்பு பூஜை முடிந்தவுடன் பிரசாதம் வழங்கி நிகழ்ச்சியானது நிறைவு பெறுகிறது. கோவில் கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.