தமிழ்நாடு அரசின் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள வ.உ.சி நகரில் “அனைவருக்கும் வீட்டு வசதி” திட்டத்தின் கீழ் ரூ.64.17 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 528 தொகுப்பு வீடுகள் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.


இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு புதிய வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் மாடசாமி, உதவி பொறியாளர் மணிகண்டன், ஒன்றிய அவைத்தலைவர் முருகன், ஒன்றிய கழக செயலாளர் சரவணகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் வசந்தகுமாரி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிலோமின் ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பாலா, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் கிளைச் செயலாளர்கள் முத்துராஜ், ஜேசுராஜ், மகாராஜன், மகளிரணி நிர்வாகிகள் ஆரோக்கியமேரி, ஜெசிந்தா, சண்முகத்தாய் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் தாளமுத்து நகர் மெயின் ரோட்டில் இருந்து கடற்கரை செல்லும் சாலையை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் 1.60 கிலோமீட்டர் தூரம் வரை சாலை மேம்படுத்தும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி, ஒன்றிய அவைத்தலைவர் முருகன், ஒன்றிய கழக செயலாளர் சரவணகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் வசந்தகுமாரி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தனுஷ் பாலன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிலோமின் ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பாலா, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைப்பாளர் ராஜேந்திரன், கிளைச் செயலாளர்கள் முத்துராஜ், ஜேசுராஜ், மகாராஜன், மகளிரணி நிர்வாகிகள் ஆரோக்கியமேரி, ஜெசிந்தா, சண்முகத்தாய் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.