ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தருவைக்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் காயத்ரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ஊராட்சி செயலர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, தருவைக்குளம் பங்குத்தந்தை வின்சென்ட், தருவைக்குளம் கிளை செயலாளர்கள் ராபின் ஞானப்பிரகாசம், தயாளன், பிரசன்னா, மகளிரணி அன்னசெல்வம், ஏ.எம்.பட்டி கிளை செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் பொதுசுகாதாரம் தொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் மாப்பிள்ளையூரணி பத்ரகாளியம்மன் கலையரங்க மண்டபத்தில் எம்.சி.சண்முகையா தலைமையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க, பழுதான தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்ய, குறைந்த மின்னழுத்தம் மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்படாமல் கண்காணிக்க, தெருக்களில் குப்பைகள் முறையாக அகற்றப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க துறைசார்ந்த அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐகோர்ட் ராஜா, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள் மகேஷ், ஜாஸ்மின், மின்வாரிய உதவி பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் வில்சன், ஊராட்சி செயலர் ஜெயரத்தினம் மற்றும் ஊராட்சி தூய்மை காவலர்கள் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
எம்.சி.சண்முகையா எம்எல்ஏ: தருவைக்குளத்தில் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் திறப்பு – மாப்பிள்ளையூரணியில் அடிப்படை வசதிகள் ஆய்வுக்கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பாஜக தீவிரம் தூத்துக்குடியில் சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் & மாநாடு!!
அடுத்த
மக்கள் குறைகளுக்கு நேரடி தீர்வு – தூத்துக்குடியில் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் திங்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026