ஓட்டப்பிடாரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க கிடைக்கும் காலம் மிகக் குறைவாக இருப்பதால், தகுதியுடைய அனைத்து வாக்காளர்களும் உடனடியாக தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

விண்ணப்பங்களை தாமதப்படுத்தும் பட்சத்தில் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தப் பணிகளில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், இவ்வாய்ப்பை இழக்காமல் பொதுமக்கள் விரைந்து செயல்படுவது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஓட்டப்பிடாரம் பகுதிக்குட்பட்ட அனைத்து குடிமக்களும் இந்த அறிவிப்பை கவனித்து தங்களது வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென எம்.சி. சண்முகையா அவர்கள் கேட்டுக்கொண்டார்.