தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டில் பகுதி செயலாளர் சுரேஷ் குமார் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தனர்.


கூட்டத்தில் குடிநீர், சாலை, சுகாதாரம், வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். அவற்றை பரிசீலித்து விரைவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேயரும் ஆணையரும் தெரிவித்தனர்.


இக்கூட்டத்தில் அந்தந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.