தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) வார்டு அளவிலான பிரச்சனைகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களுடன் விவாதித்து முடிவெடுக்கப்படும் ஜனநாயக அமைப்பாக பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி 20-வது வார்டிற்குட்பட்ட பகுதி சபா கூட்டம், பகுதி சபா உறுப்பினர் ஐசக் தலைமையில், முன்னாள் வட்ட செயலாளர் ரவீந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வார்டு பகுதிகளுக்குட்பட்ட சுகாதாரம், குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தார்.


பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து, விரைவில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.


கூட்டத்தில் திமுக பிரதிநிதி நாராயணன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரியங்கா, சுகாதார மேற்பார்வையாளர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை முன்வைத்தனர்.