தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மண்டல வாரியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த முகாமில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சந்திரபோஸ், விஜயலட்சுமி, பொன்னப்பன், கந்தசாமி, ஜான் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அசோக் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் பிரத்தியேகமாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பூங்கா மேம்பாட்டு பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.