தமிழினத்தின் ஒப்பற்ற தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான டாக்டர். கலைஞர் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மடத்தூர் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட கழக செயலாளர் பொன் பெருமாள், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன் மாமன்ற உறுப்பினர் கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். இறுதியில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
