தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் 51 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமிவேல்ராஜ் ஏற்பாட்டில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் இன்று இரவு 10.30 மணியளவில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.


திரப்படத்தை காண விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். விஜய் நடித்த மெர்சல் திரைபடத்தை மறு ஒளிபரப்பு செய்ய திரையரங்கம் வருகை தந்த மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ்க்கு சென்டை மேளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கிஷோர், கோல்டன், ஆனந்த், சிவா, சதீஷ், ஜெகன், ஜனோஜ், சதீஷ், செல்வம், மீனாட்சி சுந்தரம், கணேஷ், முருகன், செந்தில்குமார், விஜய் சுபாகர் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திரைபடத்தின் இடைவெளி வேலையில் சரியாக 12 மணியளவில் தவெக தலைவர் விஜய் பிறந்தநாளை மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையில் திரையங்க வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர்.