தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அன்னை இந்திரா நகர் பகுதி கழகம் இளைஞர் அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிடம் மாடல் அரசின் நாடு போற்றும் நான்கு ஆண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் ஹவுசிங் போர்டு எட்டையாபுரம் ரோடு வெங்கடேஸ்வரா டீ ஸ்டால் அருகில் இன்று மாலை நடைபெற்றது.

தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ்ராஜ் தலைமை வகித்தார். பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜாபர் உசேன், பால்கிங், சேர்ந்தையன், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் காளீஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார்.

தலைமை கழக பேச்சாளர்கள் வே. குழந்தைவேல், இளம் பேச்சாளர் செந்தூர் பாண்டி ஆகியோர் கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க உரை நிகழ்த்தினார்கள். பகுதி கழகச் செயலாளர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பால்துரை, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மிக்கேல்அருள் ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர், எம்எல்ஏ, எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு கலைஞரின் சாதனைகள் குறித்தும், ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும் சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் பகுதி கழக நிர்வாகிகள் பகுதி அவைத்தலைவர் ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதி தர்மராஜ், பகுதி பொருளாளர் துரைராஜ், மாவட்ட பிரதிநிதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் புவேஸ்நாதன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தர்மராஜ், 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் காந்தி மணி, பகுதி துணைச் செயலாளர் செல்லத்துரை, மாவட்ட பிரதிநிதி தர்மராஜ், பகுதி துணைச் செயலாளர் வேல்முருகன், பகுதி துணைச் செயலாளர் பூமாரி, மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன், வட்ட கழக செயலாளர்கள் 1 வது வார்டு ராஜன், 2 வது வார்டு கார்த்திகேயன், 3 வது வார்டு தெய்வேந்திரன், 14 வது வார்டு ராஜகுமார்,13 வது வார்டு வினோத், 13 வது வார்டு கிஷோர், பகுதி கழக சார்பு அணி அமைப்பாளர்கள் மகளிர் அணி ரமணி, தொண்டரணி பௌஷியா அபுதாகீர், மாணவர் அணி அன்புமணி, மீனவர் அணி மாயாண்டி, பொறியாளர் அணி பாலசுப்பிரமணியன், அயலக அணி முகமது அப்துல் ரவுமைகான், மருத்துவரணி ஜாபர் சாதிக் அகமது, வழக்கறிஞர் அணி சிவகுருநாதன், சுற்றுச்சூழல் அணி ஜெயக்குமார், வர்த்தக அணி ஜெயக்குமார், அமைப்பு சாரா கட்டுனரணி பத்மநாபன், சிறுபான்மையினர் அணி குலாம்அலிசா, தொண்டரணி சுடலை, தொழிலாளர் அணி மாரியப்பன், விளையாட்டு மேம்பாட்டு அணி ராகவன், கலை இலக்கிய பகுத்தறிவு அணி முருகேசன், இலக்கிய அணி பாலசுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் அணி ஜெயக்குமார், நெசவாளர் அணி ஞான்ராஜ், ஆதிதிராவிடர் நலக்குழு செல்லையா, விவசாய அணி குமார், உட்பட பகுதி கழக வட்ட நிர்வாகிகள், சார்பு அணி துணை அமைப்பாளர்கள், திமுக கழக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை இந்திரா நகர் பகுதி இளைஞரணி தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியில் 3 வது வார்டு இளைஞர் அணி அமைப்பாளர் ரெங்கராஜன் நன்றியுரை நிகழ்த்தினார்.
